ஜாலான் பார்லிமன், டிசம்பர் 01 (பெர்னாமா) -- பகடிவதை சம்பவங்கள் குறித்த புகார்களைக் கையாள்வதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறையை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட 2025ஆம் ஆண்டு பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோதா முதல் வாசிப்பிற்காக இன்று மக்களவையில் சமர்பிக்கப்பட்டது.
இரண்டாவது வாசிப்பிற்காக அதனை வரும் புதன்கிழமை மீண்டும் சமர்பிக்க திட்டமிட்டிருப்பதாகச் சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஓத்மான் சைட் கூறினார்.
கல்வி மற்றும் பிற நிறுவனங்களில் ஏற்படும் பகடிவதை சம்பவங்களைத் தடுப்பதையும் நிர்வகிப்பதையும் நோக்கமாக கொண்டு 54 உட்பிரிவுகளைக் கொண்ட சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ அசாலினா கூறினார்.
மேலும், பகடிவதை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுக்கவும் ஒரு சிறப்பு நடுவர் மன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை இச்சட்ட மசோதா வழிவகுக்கும் என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)