இலங்கை, 3 டிசம்பர் (பெர்னாமா) -- இதனிடையே, இலங்கையில் டிட்வா புயலினால் சேதமடைந்த வீடுகள், தொழில்துறைகள் மற்றும் சாலைகளின் மறுசீரமைப்பிற்கு 700 கோடி டாலர் தேவைப்படுகிறது.
இப்புயலினால் கடந்த வாரம் அந்நாடு முழுவதிலும் கனமழையைத் தொடர்ந்து, காணாமல் போன 366 பேரை தேடி மீட்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாக நம்பப்படுக்கிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25,000 ரூபாயும், வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயையும் அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.
அந்நாடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீட்சி பெறாத நிலையில், இப்பேரிடரினால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள அனைத்துலக உதவி மிகவும் அவசியம் என்று இலங்கை அதிபர் அனுர குமரா டிஸ்ஸனயாகே வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)