பொது

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய தலைவராகத் தெங்கு சஃப்ருல்

03/12/2025 07:33 PM

கோலாலம்பூர், டிசம்பர் 03 (பெர்னாமா) -- MIDA எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய தலைவராக தெங்கு டத்தோ ஶ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் இன்று தொடங்கி ஈராண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது நியமனத்திற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சரான தெங்கு ஜஃப்ருல்க்கு MIDA தலைவர் பொறுப்பு மட்டுமல்லாது இதர கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படும் என்று பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

எனினும், இது இன்னும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பின்னர் பிரதமர் அதற்கான அறிவிப்பை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக வகித்திருந்த செனட்டர் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்த நிலையில் தெங்கு சஃப்ருல் MITI அமைச்சர் எனும் பொறுப்பை முடித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை