சைபர்ஜெயா, டிசம்பர் 04 (பெர்னாமா) -- சட்டவிரோத முதலீடுகளின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு பொது சேவை நிறுவனங்களும் கடன் ஆலோசனை மற்றும் நிர்வகிப்பு நிறுவனங்களும் ஒத்துழைப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.
அதிகப்படியான கடனில் சிக்கித் தவிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான புகார்கள் வழி அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் போலியான முதலீட்டு மோசடியால் பாதிக்கப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார்தெரிவித்தார்.
வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களும் வாழ்க்கைத் துணைவர்களின் விருப்பங்களுக்கு இணங்குவதும் அரசு ஊழியர்கள் நிதிப் பிரச்சினைகளில் பாதிக்கப்படுவதற்கான காரணங்களில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.
''பெரும்பாலானவை ஆசிரியர்களை உள்ளடக்கியது என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். எனவே ஒவ்வொரு பள்ளியும் ஏ.கே.பி.கே உடன் ஒரு திட்டத்தைச் செய்வதைக் கட்டாயமாக்குமாறு கல்வி இயக்குநரிடம் கேட்டுள்ளேன். எல்லாப் பள்ளிகளுக்கும் இதைக் கட்டாயமாக்கியுள்ளேன். ஏனென்றால் சில நேரங்களில் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் கடன் வாங்கும்போது முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது சாத்தியமில்லை. எல்லா முதலீடுகளிலும் ஆபத்துகள் உள்ளன. நாம் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது கடினம். பலர் முதலீடு செய்வதில் வெற்றி பெறுவதில்லை,'' என்றார் டான் ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார்.
வியாழக்கிழமை புத்ராஜெயா எம்.ஆர்.டி நிலையத்தில் பயணிகளைச் சந்தித்த பின்னர் டான் ஶ்ரீ சம்சுல் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)