கோலாலம்பூர், டிசம்பர் 17 (பெர்னாமா) -- நம்பிக்கை மோசடி சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் Angkatan Bersatu Anak Muda அர்மடாவின் நிதி சம்பந்தப்பட்ட கள்ளப்பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு குறித்து அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லடின் கடிதம் ஒன்றின் வழியாகக் கூட்டரசு நீதிமன்ற துணைப் பதிவாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தரப்பிற்கும் எதிர்தரப்பிற்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விதித்திருந்த உத்தரவு குறித்து தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தாரிடமிருந்து கருத்துகளையும் உத்தரவையும் தமது தரப்பு பெற்றதாக டத்தோ வான் ஷஹாருடின் இன்று வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, மேல்முறையீட்டைத் தொடரவும் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவும் தேசிய சட்டத்துறை தலைவர் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கின் வலிமையில் நம்பிக்கை கொண்ட அவர் இன்று காலை மணி 9.10 அளவில் அக்கடித்தத்தை நீதிமன்றத்திற்கு அனுப்பியதாகத் தொடர்புக் கொண்டபோது கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)