வங்காளதேசம், டிசம்பர் 04 (பெர்னாமா) -- மற்றுமொரு நிலவரத்தில், இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை வீழ்த்திய மாணவர்களின் திட்டங்களைக் கேட்டறிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்காவில் திரண்டனர்.
ஆனால் வீதிகளில் பெற்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுவதில் தேசிய குடிமக்கள் கட்சியான NCP தற்போது, சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல ஆண்டுகளாக
அரசியலில் நீடித்த குடும்ப அணுகுமுறை மற்றும் இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்ற மாணவர்கள் தலைமையிலான NCP போராடி வருகின்றது.
300 இடங்களில் போட்டியிட இலக்கு கொண்டுள்ள NCP கட்சி தற்போது வெறும் 6 விழுக்காடு ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)