பொது

கால்வாயில் விழுந்த சிறுவன் பலி

05/12/2025 07:14 PM

சிலாங்கூர், டிசம்பர் 05 (பெர்னாமா) -- ஒரு பெரிய கால்வாயின் நீரோட்டத்தில் தமது அண்ணனுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்ததை போலீஸ் உறுதிபடுத்தியது.

சிலாங்கூர், தாமான் பெரிம சாவ்ஜானா கால்வாயில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.

12 வயதுடைய அச்சிறுவன் கால்வாயில் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்டுடெடுக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் ACP நஸ்ரோன் அப்டுல் யூசோப் தெரிவித்தார்.

இரவு மணி 7.47-க்கு, மயக்கமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவன் அவசர உதவி வழங்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

ஆனால், இரவு மணி 10-க்கு அவன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், 14 வயதுடைய அச்சிறுவனின் அண்ணனைத் தேடுவதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ACP நஸ்ரோன் அப்டுல் யூசோப் தெரிவித்தார்.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மாவட்ட பொது தற்காப்பு படை (APM) மற்றும் அரச மலேசிய போலீஸ் படை (PDRM) ஆகிய தரப்புகளை சேர்ந்த மொத்தம் 35 உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)