உலகம்

தாய்லாந்து - கம்போடியா மோதல்; தாய்லாந்து வீரர்கள் பலி

14/12/2025 05:48 PM

தாய்லாந்து, டிசம்பர் 14 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான அண்மைய மோதலில், தாய்லாந்தின் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 270 பேர் காயமடைந்ததாக தாய்லாந்து தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், 970 தற்காலிக தங்குமிடங்களில் இரண்டு லட்சத்து 63,105 பேர் தங்கியுள்ளதாக அந்த அமைச்சு கூறியது.

மோதலினால் உயிரிழந்த தாய்லாந்து பொதுமக்களின் எண்ணிக்கையும் ஏழாக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி கம்போடியாவும் தாய்லாந்தும் எல்லை மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)