உலகம்

பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ் வளாகத்தில் ஹெலிகாப்டர் விபத்து - மூவர் காயம்

05/12/2025 03:02 PM

அர்ஜென்டினா, டிசம்பர் 05 (பெர்னாமா) -- அர்ஜென்டினா, பியூனஸ் அயர்ஸ்சில் உள்ள டென்னிஸ் வளாகத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் அருகில் இருந்தவர்கள் திடீர் பதற்றத்திற்கு ஆளாகினர். இச்சம்பவத்தில் விமானியுடன் இரு பயணிகளும் காயமுற்றனர்.

காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் நகர அவசர மருத்துவ சேவையாளர்கள் அவர்களுக்கு உடனடியாக சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர்.

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அதனை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவத்தில் பொதுமக்கள் காயமடைந்ததாக தகவல் கிடைக்கவில்லை.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுற்றியுள்ளப் பகுதிகளில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)