உலகம்

டிரம்பிற்கு முதல் முறையாக அமைதிப் பரிசு

06/12/2025 07:19 PM

வாஷிங்டன் டி.சி, நவம்பர் 06 (பெர்னாமா) --  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு முதல் முறையாக 2025-ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசை வழங்கி சிறப்பித்தது பிஃபா.

அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ, 2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையின் குலுக்கல் நிகழ்ச்சியின்போது வழங்கினார்.

வாஷிங்டனில் உள்ள Kennedy மையத்தில், டிரம்பிற்கு வழங்கப்பட்ட இந்த விருது பிஃபா மன்றம் வாக்களிக்காமல், இறுதி பட்டியலில் இருந்து இன்பான்டினோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனிடையே இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப், இது தமது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் கூறினார்.

மேலும், லட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்ததற்கான டிரம்பின் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அங்கீகாரமாக இந்த விருது அவருக்கும் வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)