புத்ராஜெயா, டிசம்பர் 07 (பெர்னாமா) -- மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக அதிக அவசியம் ஏற்படும் இடங்களில் போதுமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீஸ் உறுப்பினர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதன் வழி, பொது சேவை வழங்கும் முறையை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.
இதற்கு முன்னர், மிகப்பெரிய எண்ணிக்கையிலான நிபுணத்துவ மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
மாறாக, அவர்களின் நிபுணத்துவம் தேவைப்படும் மருத்துவமனைகள் அல்லது சிகிச்சையகங்களில் அல்ல என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் அவர்களின் நிபுணத்துவம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதும் அந்த முயற்சியை செயல்படுத்துவதற்கான நோக்கங்களில் ஒன்றாகும் என்று டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
''பல நிபுணத்துவ மருத்துவர்கள் மருத்துவமனைகளிலோ அல்லது சிகிச்சையகங்களிலோ இல்லை. மாறாக, சுகாதார அமைச்சில் பணிபுரிவதை நாங்கள் காண்கிறோம். எனவே, மக்களுக்கான சேவை என்பதால் சுகாதார அமைச்சின் தலைமையகத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மருத்துவர்களை, மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களுக்கு நாங்கள் அனுப்புகிறோம்.'' 'என்றார் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் / அரசாங்கத் தலைமைச் செயலாளர்
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற Rancakkan MADANI நிகழ்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் 2025 பொது சேவை துறை மறுசீரமைப்பு தேசிய மாநாட்டில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)