இந்தியா, டிசம்பர் 07 (பெர்னாமா) -- இந்தியா வட கோவாவில் உள்ள ஒரு பிரபலமான இரவு கேளிக்கை விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் விடுதியில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது.
நான்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்ததை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏழுவரின் அடையாளங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எரிவாயு கொள்கலன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
தீ பாதுகாப்பு விதிமுறைகளை விடுதி நிர்வாகம் பின்பற்றவில்லை என்று தொடக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் உத்ரவாதம் அளித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)