கோலாலம்பூர், டிசம்பர் 07 ( பெர்னாமா) -- தாய்லாந்து - கம்போடிய எல்லைப் பகுதியில் மீண்டும் உருவெடுத்துள்ள ஆயுதமேந்திய மோதல்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.
அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவை பேணுவதற்கான தமது நீண்டகால முயற்சி இதனால் பாதிப்படைவதாக இன்று தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலை தொடர்ந்தால் அது வட்டார நிலைத்தன்மையையும் முந்தைய பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட முன்னேற்றத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் அச்சம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பங்காளி நாடுகளாகவும் ஆசியானின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருக்கும் தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியோடு நிலைமையைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை கண்டறிந்து செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
பழைய மோதல்களை மீண்டும் புதுப்பித்து நீண்டகால பதற்றங்களைத் தொடர இவ்வட்டாரம் அனுமதிக்க முடியாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)