அமெரிக்கா, 14 டிசம்பர் (பெர்னாமா) -- அமெரிக்கா ரோட் தீவு மாநிலத்தில் உள்ள BROWN பல்கலைக்கழகத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் எண்மர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களின் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கண்டுபிடிக்கும் தேடலில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக, பிராவிடன்ஸ் நகர மேயர் தெரிவித்திருக்கிறார்.
இதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸ் இன்னும் உறுதி செய்யவில்லை.
இச்சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
மேலும், சந்தேக நபர் எவரும் இதுவரை தடுத்து வைக்கப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ)