கோவா, 08 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியா, கோவாவில் உள்ள ஒரு பிரபலமான இரவு கேளிக்கை விடுதியில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 25 பேரின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்கள் கூடினர்.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு முழுவதும் தீவிர பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைத்து உடல்களையும் மீட்டனர்.
தீ விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களில் 20 பேர் தங்கும் விடுதி ஊழியர்களாவர்.
மேலும், ஐவர் சுற்றுப் பயணிகள்.
இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பதினருக்கு 50 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னதாக அறிவித்திருந்தார்.
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அதன் தொடர்பான அறிக்கை பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இக்கொடிய தீ விபத்து தொடர்பாக கேளிக்கை விடுதியின் நிர்வாகியும் மூன்று ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)