உலகம்

வடகிழக்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 30 பேர் காயம்

09/12/2025 01:22 PM

தோக்கியோ, நவம்பர் 09 (பெர்னாமா) --  வடகிழக்கு ஜப்பானில், நேற்றிரவு 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மேலும், சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி தெரிவித்திருக்கின்றார்.

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை நிறுவனம் விடுத்துள்ளது,

அலைகள் மூன்று மீட்டர் உயரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அந்நாட்டின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியை 3 மீட்டர் உயரம் அல்லது 10 அடி வரை சுனாமி தாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஜே.எம்.ஏ எச்சரித்திருப்பதாக சனே தகைச்சி கூறியுள்ளார்.

குறிப்பாக, ஹொக்காய்டா, அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களில் எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று காலையில், சில இடங்களில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் மீட்டுக்கொள்ளப்பட்ட வேளையில், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்று தகைச்சி தெரிவித்தார்.

ஆயினும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5, 5.0, 4.8 மற்றும் அதிகாலையில் 5.1 ரிக்டர் அளவில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)