தோக்கியோ, நவம்பர் 09 (பெர்னாமா) -- வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கின்றது.
தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருவதாக அது கூறியுள்ளது.
இந்நிலநடுக்கத்தில் இதுவரை மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் உறுதிசெய்யப்படவில்லை என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு நேரப்படி, இரவு மணி 11.15-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்தது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் அந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மலேசியர்கள் கவனமாக இருக்கவும், கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து, ஜப்பானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
தேவைப்படும்போது உதவி உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்கள் இருப்பிடத்தைப் பதிவு செய்ய மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)