கிளந்தான், 10 டிசம்பர் (பெர்னாமா) - டிசம்பர் முதலாம் தேதி, வீடொன்றில் தமது மனைவியைக் கொலை செய்ததற்காக, முதியவர் ஒருவர், இன்று தானா மேரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், 63 வயதான இப்ராஹிம் சுலைமான் மீதான குற்றச்சாட்டு, நீதிபதி துன் ஃபாயிஸ் பிக்ரி துன் அஸ்துல் சைனி முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
டிசம்பர் முதலாம் தேதி, தானா மேரா, குவால் ஈப்போ, கம்போங் பாக்கு-வில் உள்ள எண் இல்லாத வீடொன்றில், காலை மணி 9.30 முதல் மதியம் மணி 12.15-க்குள், 40 வயதான மஸ்துரா அப்துல்லா-வைக் கொலை செய்ததாக, இப்ராஹிம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-டின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12-க்கும் குறையாத பிரம்படி விதிக்கப்படலாம்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)