சிரம்பான், 10 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று காலை ஜாலான் ராசா மம்பாவ்விலிருந்து போர்ட் டின்சன் டோல் சாவடியை நோக்கி, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட வேளையில், மற்றொருவர் காயங்களுக்கு ஆளாகினார்.
காலை மணி 7.30 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காயமடைந்த 47 வயதான ஆடவர், சிரம்பான், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சைப் பெற்று வருவதாக, நெகிரி செம்பிலான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 43 வயதான ஆடவர், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில், டத்தோ அல்சாப்னி கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் காயமடைந்த உள்நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு பல்வேறு குற்றங்களை உட்படுத்தி 15 குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்ட வேளையில், மரணமடைந்த ஆடவருக்கு எவ்வித குற்றப்பதிவும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகக் கூறிய டத்தோ அல்சாப்னி குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 மற்றும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் செக்ஷன் 3-ரின் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இதர நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)