உலகம்

கம்போடியாவுடன் போர் தொடரும் - தாய்லாந்து

14/12/2025 01:20 PM

பேங்காக், டிசம்பர் 14 (பெர்னாமா) -- கம்போடியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும், எல்லையில் நிகழ்ந்து வரும் மோதலை தமது இராணுவம் தொடரும் என்றும், தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் அனுதின் சார்ன் விராகுல் தெரிவித்திருக்கிறார்.

''போர் நிறுத்த பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. எந்த ஒப்பந்தங்களும் எட்டப்படவில்லை. நிலைமையைப் புதுப்பிப்பதற்காக மட்டுமே இது (டிரம்ப் உடனான அழைப்பு). எல்லையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல். தாய்லாந்து அதன் இறையாண்மையையும் அதன் மக்களையும் பாதுகாக்க தொடர வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தினேன்,'' என அனுதின் சார்ன் விராகுல் கூறினார்.

இப்போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் மீண்டும் மத்தியஸ்தராகச் செயல்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தாய்லாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அனுதின் அவ்வாறு கூறினார்.

நாட்டின் இறையாண்மையையும் மக்களையும் பாதுகாப்பதற்கு இதனைத் தொடர வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அனுதின் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மனெட்-உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர்
அவர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.

எனினும், டிரம்புடன் நடத்தப்பட்ட தொலைபேசி அழைப்பிற்கு பிறகும் கூட அவ்விரு தலைவர்களும் போர் நிறுத்தம் குறித்த எந்தவோர் உடன்பாட்டையும் எட்டவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)