பாங்காக் , 10 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் 2025 சீ விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கம்போடியா விலகியுள்ளது.
தங்கள் அணியின் பாதுகாப்பை முதன்மை காரணமாகக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கம்போடியாவின் தேசிய ஒலிம்பிக் குழு என்.ஓ.சி.சி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விலகல் முடிவு, மிகவும் கடினமானதாக இருந்தாலும், தீர்க்கமான ஒன்று என்பதை என்.ஓ.சி.சி ஒப்புக்கொண்டது.
முக்கியமாக, பாதுகாப்பு கவலைகள் மற்றும் விளையாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்ட பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் குழு மற்றும் விளையாட்டு வீரர்கள் மீண்டும் கம்போடியாவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய என்.ஓ.சி.சி முடிவு செய்திருக்கின்றது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)