உலகம்

மத்திய ஜகார்த்தாவில் தீ விபத்து; 22 பேர் பலி

10/12/2025 06:38 PM

இந்தோனேசியா, 10 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, மத்திய ஜகார்த்தாவில் உள்ள Terra Drone அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயை அணைக்க 29 தீயணைப்பு இயந்திரங்களுடன் 101 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, மத்திய ஜகார்த்தா தீயணைப்பு துறை தகவல் பிரிவின் மூத்த அதிகாரி டுவி செப்தியன்னோ கூறினார்.

கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த மின்கலனில் இருந்து தீ ஏற்பட்டதாக நம்பப்படுவதாக, செப்தியன்னோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட முதல் மாடி டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களுக்கான லிதியும் வகை மின்கலன்களை உற்பத்தி செய்யும் இடமாக இருந்ததாக, அவர் மேலும் விவரித்தார்.

மேலும், தீ விபத்தில் மின்கலனில் இருந்து வெளியேறிய புகையை பாதிக்கப்பட்டவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, செப்தியன்னோ கூறினார்.

உயிரிழந்தவர்களில் ஏழு ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)