ஆஸ்திரேலியா, டிசம்பர் 10 ( பெர்னாமா) -- உலகிலேயே 16 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்ச் சமூக ஊடக பயன்பாட்டைத் தடை செய்யும் முதல் வகை சட்டத்தை ஆஸ்திரேலியா இன்று முழுமையாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை உலகளாவிய இலக்கவியல் ஆளுமையில் ஒரு பெரிய மாற்றத்தை
ஏற்படுத்துவதோடு உலகம் முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தும் இளம் பயனர்களைக் பாதுகாக்க அரசாங்கங்கள் எவ்வாறு செயல்படலாம் என்பதற்கான புதிய அளவுகோலையும் அமைத்துள்ளது.
சிறார்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்பதைக் உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக தாம் இந்நடவடிக்கையை கருத்துவதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
இப்போது கூட்டரசு சட்டங்கள் சமூக ஊடக தளங்கள் வயது குறைந்தவர்களின் கணக்குகளைத் தடுக்க நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தடைக்கு உட்பட்ட தளங்களில் டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், எக்ஸ், ரெட்டிட் மற்றும் யூடியூப் ஆகியவை அடங்கும்.
சட்டத்தின் கீழ் இணக்கம் தொடர்பான பொறுப்பு முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களிடமே உள்ளது பெற்றோர்களோ அல்லது இளம் பயனர்களிடமோ அல்ல.
எனவே, வயது வரம்பை அமல்படுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய டாலர் 4 கோடியே 95 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)