பொது

போலீஸ் நிலையத்திற்குச் செல்லும் பொதுமக்கள் முறையான உடை அணிய வேண்டும்

11/12/2025 02:34 PM

புத்ராஜெயா, 11 டிசம்பர் (பெர்னாமா) --  புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்குச் செல்லும்போது முறையான உடை அணிய வேண்டியதன் அவசியத்தைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர் பரிந்துரைக்கப்பட்ட முறையான ஆடை விதிமுறையைப் பின்பற்றாவிட்டாலும், போலீஸ் அவரின் புகாரை ஏற்றுக் கொள்ளும்.

ஏனெனில், புகாரைப் பெறுவது உட்பட உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவுவது போலீசின் முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார்.

''போலீசின் முக்கிய வேலை என்ன? புகாரைப் பெறுவது. அது அவர்களின் (போலீஸ்) வேலை. நிலைமை என்ன? எவ்வாறு இருந்தாலும் புகாரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆமாம். ஒரு சுற்றறிக்கை இருக்க்கிறதா? உள்ளது. அந்த சுற்றறிக்கைதான் நமக்கு வழிகாட்டி'', என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை ஆடைக் குறியீட்டை மீறியதற்காக பெண் ஒருவர் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)