புதிய பொருளாதார மையமாக ரயில் நிலையங்களுக்கான சேவை அமைகின்றது

11/12/2025 07:24 PM

ஜோகூர், டிசம்பர் 11 ( பெர்னாமா) --  சிறு வணிகர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கான புதிய பொருளாதார மையமாக குறிப்பாக புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் அமைகின்றன.

ரயில் நிலையங்கள் போக்குவரத்து உள்கட்டமைப்புகளாக மட்டுமல்லாமல் வணிகம் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டு மையங்களாகவும் செயல்படும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் ஈ.சி.ஆர்.எல் செயல்முறைபடி இந்த நிலையங்கள் அனைத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான புதிய மையமாக செயல்படும். மேலும், புதிய முதலீடுகளையும் உள்ளடக்கியது. ஆனால், ஆழகான, தூய்மையான உணவுக் கடைகள், வீடமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்வதற்கு அமைச்சு, துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

இன்று, ஜோகூரில் நடைபெற்ற கெமாஸ்-ஜோகூர் பாரு மின்சார இரட்டை தடத்தின் நிறைவு மற்றும் செயல்பாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை கூறினார்.

மடானி அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறைக்கு ஏற்ப அரசாங்கம் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மக்களுக்கான நலத்திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)