கொல்கத்தா, டிசம்பர் 13 (பெர்னாமா) -- உலகப் புகழ்பெற்ற காற்பந்து நட்சத்திரமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
இன்று கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் அவரைக் காண்பதற்கு அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
கடுமையான பாதுகாப்பின் கீழ் விமான நிலையம் வந்தடையும் லியோனல் மெஸ்சியை வரவேற்பதற்காக ரசிகர்கள் அர்ஜெண்டினா கொடிகளை அசைத்து அவரது பெயரை உரக்கச் சொல்லி கோஷமிட்டனர்.
மெஸ்சியைக் காண்பது தங்கள் கனவுகளில் ஒன்று அங்குள்ள ரசிகர்கள் சிலர் கூறினார்.
இந்த வருகைக்கு முன்னதாகக் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கொல்கத்தா காற்பந்து ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பை உட்பட்ட நகரங்களுக்குச் சுற்றி பயணம் மேற்கொள்ளவுள்ள அவர் புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)