கம்போடியா, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- இதனிடையே, அவ்விரு நாடுகளுக்கான மோதலில் இவ்வாரம் மட்டும் தாய்லாந்து நாட்டவர் குறைந்தது 20 பேர் பலியான வேளையில், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இதற்கு கம்போடியா பொறுப்பேற்றால் மட்டுமே, போர் நிறுத்தம் ஏற்படும் என்று, அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப்-உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தாம் குறிப்பிட்டதாக தாய்லாந்து இடைக்கால பிரதமர் அதுதின் சார்ன்விராகுல் தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் தரப்பினர் என்பதால், கம்போடியாவே நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்றும், மாறாக பாதிக்கப்படும் தரப்பினராக இருக்கக்கூடாது என்றும் அனுத்தின் வலியுறுத்தினார்.
போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியதாக அனுத்தின் தெரிவித்தார்.
இந்நிலையில், போரை நிறுத்தக் கோரி கம்போடிய பிரதமரை தாம் தொடர்பு
கொள்ளவிருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)