உலகம்

சீன நிபுணர்களுக்கான விசா கட்டுப்பாட்டில் இந்தியா தளர்வு

13/12/2025 05:02 PM

சீனா, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- சீன நிபுணர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியிருக்கின்றது.

அவர்களுக்கான வர்த்தக விசாக்களை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள உற்பத்தியை இழக்கும் தாமதங்களையும் முடிவுக்குக் கொண்டு வரவும் இந்நடவடிக்கை அவசியமானது.

2020-ஆம் ஆண்டின் மத்தியில் அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகள் இமயமலை எல்லையில் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, சீனாவின் வருகையை இந்தியா தடை செய்தது.

இது உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சுகளைக் கடந்து வர்த்தக விசாக்களின் சரிபார்ப்பை விரிவுப்படுத்தியது.

விசாக்களைப் பெறுவது தொடர்பான பிரச்சனைகள் தற்போது முழுமையாக தீர்வுக் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாண்டு சீனாவுக்குச் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் சீ ஜின்பிங்-ஐ சந்தித்து உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)