பினாங்கு, 14 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டாய இடைநிலைக் கல்வியை அமல்படுத்துதல், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்தல், நாடு தழுவிய அளவில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துதல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் உட்பட பல முக்கிய சாதனைகளைக் கல்வி அமைச்சு புரிந்துள்ளது.
கல்வி சீர்திருத்தத்தை வலுப்படுத்துவதிலும் 2027-ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்திற்கு ஆசிரியர்களை தயார்படுத்துவதிலும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
98 விழுக்காடு அல்லது 52,948 புதிய ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வி அமைச்சு வெற்றி பெற்றிருப்பதையும் ஃபட்லினா சிடேக் சுட்டிக்காட்டினார்.
''பாலர் பள்ளியிலிருந்து தொடங்கி 2027 மற்றும் 2026 பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாம் ஒன்றாகத் தொடர வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் தொடர்ந்து கவனம் செலுத்தவும், கற்றல் கற்பித்தலை மேம்படுத்தவும், கற்பித்தலில் தேர்ச்சி பெறவும், வகுப்பறைகளில் சீர்திருத்தங்களைச் செய்யவும், ஆசிரியர்கள் மீதான சுமையைக் குறைக்கவும் கல்வி அமைச்சு உறுதிபூண்டுள்ளது.'' என்றார் ஃபட்லினா சிடேக்
மேலும், பள்ளிகளில் மறைக்காணிகளைப் பொருத்த 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக ஃபட்லினா கூறினார்.
2025-ஆம் ஆண்டில் 44 புதிய பள்ளிகள் கட்டப்பட்டு சேதமடைந்த 44 பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ)