கெடா, 14 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி மலேசியா-தாய்லாந்து எல்லை அருகே உள்ள கெடா புருங் மற்றும் படாங் டடெரப் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 331 கிலோ கிராம் எடை கொண்ட SYABU வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் KURIER எனப்படும் பொருள் அனுப்பும் சேவையில் பணியாற்றும் 37 வயதுடைய தாய்லாந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
சோதனை நடவடிக்கையின் போது SYABU வகை போதைப்பொருள் அடங்கிய 331 பொட்டலங்கள் ஒன்பது வெள்ளை நிற சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஒவ்வொரு பொட்டலமும் ஒரு கிலோ எடையுடையது எனடத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
''விசாரணையில் அண்டை நாட்டைத் தளமாகக் கொண்டு, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் விநியோகிக்கப்படவிருந்தன. மேலும், இந்த இக்குற்றச்செயலுடன் தொடர்புடைய வலையமைப்பை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஈடுபடுபவர்களுக்கு 20,000 தாய் பாட் அல்லது ரி.ம.2,600 ஊதியமாக வழங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
SUPER: டத்தோ அட்ஸ்லி அபு ஷா / கெடா மாநில போலீஸ் தலைவர்
எல்லை அருகே சந்தேக நபரின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் கண்காணித்த நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த ஆடவர் போதைப்பொருள் மூட்டையை சுமந்துகொண்டு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாக அட்ஸ்லி கூறினார்.
மேலும், சந்தேக நபருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் Amphetamine மற்றும் Methamphetamine உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39B மற்றும் அதே சட்டத்தின் செக்ஷன் 15(1)(A) ஆகியவற்றின் கீழ் டிசம்பர் 18-ஆம் தேதி வரை அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ)