உலகம்

ரசிகர்கள் வன்முறை; மெஸ்சியிடம் மன்னிப்புக் கேட்ட மம்தா பானர்ஜி

14/12/2025 05:23 PM

கொல்கத்தா, டிசம்பர் 14 (பெர்னாமா) -- இதனிடையே, ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மெஸ்சியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிர்வாகக் குறைப்பாடு இருந்ததை ஒப்புக்கொண்ட அவர் இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும்போலீஸ் கூறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)