பத்தும் தணி, டிசம்பர் 14 (பெர்னாமா) -- இன்று பிற்பகலில் நடைபெற்ற 2025 சீ விளையாட்டுப் போட்டியின் பூப்பந்தாட்டத்தில் தங்கம் வென்று, நாட்டின் பத்தாண்டு கால கனவை தேசிய மகளிர் இரட்டையர் பெர்லி டான் - எம் தீனா நிறைவேற்றினர்.
86 நிமிடங்கள் நீடித்த இவ்வாட்டம் பெரும் சவாலாக அமைந்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில் இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா டுவிபுஜி குசுமா - மெய்லிசா திரியாஸ் புஸ்பிதாசாரி ஜோடியை அவர்கள் வீழ்த்தினர்.
தாய்லாந்து, தம்மாசாட் ஜிம்னசியும் பல்கலைகழகத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் முதல் செட்டை, 21-16 என்ற புள்ளிகளில் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பெர்லி டான் - எம் தீனா ஜோடி வென்றது.
இரண்டாம் செட்டின் தொடக்கத்தில் 7-0 என்ற மதிப்பெண்களுடன் பயணித்தாலும், எதிரணியின் அபார ஆட்டத்திறனால் அதன் இறுதியில் 19-21 என்ற மதிப்பெண்களில் பெர்லி டான் - எம் தீனா தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த மூன்றாம் செட்டில் ஃபெப்ரியானா - மெய்லிசாவை வீழ்த்தி, 21-17 என்ற மதிப்பெண்களுடன் தேசிய இணையினர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
''ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது ஆதரவுதான் என்று நான் நினைக்கிறேன். மேலும் நாங்கள் விளையாடிய ஒவ்வொரு புள்ளியிலும் ஒருபோதும் கைவிட வில்லை. ஆம், இன்றைய வெற்றிக்கு மிகவும் மகிழ்ச்சி,'' என பெர்லி டான் & எம்.தினா கூறினர்.
பல உலகப் போட்டிகளில் பெர்லி டான் & எம்.தினா வெற்றி பெற்றிருந்தாலும், சீ விளையாட்டுப் போட்யில் தங்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)