பொது

ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

15/12/2025 04:12 PM

கோலாலம்பூர், நவம்பர் 15 (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து முக்கியமான அம்சங்களும் சீரான முறையில் ஒழுங்கமைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

"செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட வெளியுறவு அமைச்சர்களுக்கான சந்திப்பின் ஒத்திவைப்பை நாங்கள் இன்னும் கண்காணித்து வருகிறோம். எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்த நாங்கள் ஒத்திவைக்கிறோம். மோசமாக சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்துமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நான் அவர்களை தினமும் தொடர்பு கொண்டு வருகிறேன்." என்றார் அவர்.

கம்போடியாவிற்கு எரிபொருள் மற்றும் இராணுவப் பொருட்களை வழங்குவதைத் தடுக்க தாய்லாந்து விரிகுடாவில் தடை பிறப்பிக்கப்படுவது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

"நாங்கள் இன்னும் நிலைமையை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக்க நன்றி." என்றார் அவர்.

இரண்டாவது வாரத்தை எட்டிய மீண்டும் தொடரப்பட்டுள்ள சண்டையை நிறுத்துவதற்கு, கம்போடியா போர்நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதை பேங்காக் மறுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)