மும்பை, நவம்பர் 26 (பெர்னாமா) -- உலகப் புகழ்பெற்ற காற்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சியின் இரண்டாம் நாள் இந்திய பயணம் நேற்று சிறப்பாக நிறைவடைந்தது.
முதல் நாளில் சில குழப்பங்கள் ஏற்பட்டபோதிலும், உலகக் கிண்ண வெற்றியாளரான அவர் நேற்று ரசிகர்களையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்தார்.
மும்பை, வான்கிடே அரங்கிற்கு, அர்ஜெண்டினா ஜெர்சியுடன் வருகைத் தந்திருந்த லியோனல் மெஸ்சியை, ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
38 வயதான அந்த நட்சத்திரம், தமது இண்டர் மயாமி அணியின் சக ஆட்டக்காரர்கள் லுயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி போல்ஆகியோருடன் வருகை புரிந்திருந்தார்.
அவர்களோடு, சச்சின் டெண்டுல்கரும், இந்தியாவின் காற்பந்து வீரர் சுனில் செத்ரி-யும் இணைந்திருந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதே அரங்கில், 2011-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றபோது தாம் அணிந்திருந்த 10-ஆம் எண் கொண்ட ஜெர்சியை டெண்டுல்கர் மெஸ்சிக்கு பரிசாக வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)