உலகம்

பள்ளி பேருந்து விபத்து; குறைந்தது 12 பேர் பலி

15/12/2025 05:47 PM

கொலம்பியா, டிசம்பர் 15 (பெர்னாமா) -- வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

அப்பேருந்து ஆண்டிகோவியனொ உயர்க்கல்வி மாணவர்களை ஏற்றிக் கொண்டு மெடெலின்னில் உள்ள பெலொ பகுதிக்குச் சென்றுக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்துள்ளது.

அப்பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் சுற்றுலாப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது சம்பந்தப்பட்ட பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

45 பயணிகளை ஏற்றிச் சென்ற அப்பேருந்து சுமார் 80 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தொடக்கக்கட்ட அறிக்கைகள் காட்டுகின்றன.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)