கோலாலம்பூர், டிசம்பர் 16 (பெர்னாமா) -- நாட்டில் நிலவும் இனவாத பிரச்சினைகளில் பெரும்பாலானவை அரசியல் தலைவர்களைச் சார்ந்தாகவே பதிவாகியுள்ளதாகத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
குறிப்பாகத், தேர்தல் சமயங்களில் அரசியல் தலைவர்கள் சிலர் வெளியிடும் கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சமூகத்தில் நிலவும் இன ரீதியிலான பிரச்சினைகளைக் களைய தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தரவுகளின் அடிப்படையில் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளே அதிகம் உள்ளதாக இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த செனட்டர் சரஸ்வதி கூறினார்.
அரசியலைப் பொறுத்த வரையில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. அவற்றை நாம் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டுமே தவிர வரம்பு மீறி செயல்படக் கூடாது.
இது போன்ற பொறுப்பற்ற செயல் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்பதை அரசியல் தலைவர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)