புத்ராஜெயா, 16 டிசம்பர் (பெர்னாமா) -- சபா, கினபதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லமாக் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் நிர்ணயித்துள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு ஜனவரி 20-ஆம் தேதியும் நடைபெறும் என்று எஸ்.பி.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
இத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும், ஜனவரி 10-ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதி வரையில் 14 நாட்களுக்குப் பிரச்சாரக் காலக்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
''சபா, P187 கினபதாஙான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் N58 லமாக் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அனைத்து வகை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் இன்று, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன'', என்று டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் கூறினார்.
தற்போது பயன்படுத்தப்படும் தேர்தல் வாக்காளர் பதிவு, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பதிவாகும்.
இதில், 48,722 வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து பிரிவுகளுக்குமான அஞ்சல் வாக்குகளின் விண்ணப்பம் www.spr.gov.my என்ற அகப்பக்கம் வழியாக மேற்கொள்ளப்படும்.
டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ரடின், டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்த இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)