பொது

அனைத்துலக புத்தாக்க போட்டியில் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

16/12/2025 05:04 PM

சிம்மோர், 16 டிசம்பர் (பெர்னாமா) --  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதை அனைத்துலக அளவில் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

அவ்வகையில், அண்மையில் இயங்கலை வழி நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு WINSTEM அனைத்துலக புத்தாக்க போட்டியில் பேராக், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முப்பது மாணவர்கள் ஆறு அறிவியல் புத்தாக்க கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி சாதனைப் படைத்தனர்.

18 நாடுகளைச் சேர்ந்த 1,700 குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர்.

''இவ்வாண்டு எங்கள் பள்ளியில் ஆறு புத்தாக்க கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி அனைத்துலக அளவில் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். WINSTEM எனும் அறிவியல் புத்தாக்க போட்டியில் 30 மாணவர்கள் மற்றும் ஆறு ஆசிரியர்கள் பங்கேற்று இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களைத் தட்டிச் சென்றனர்'', என்றார் அவர்.

TRHM எனப்படும் சுனாமியை எதிர்கொள்ளும் வீடுகள், ''Not-Not'' இசை புரிதலை மேம்படுத்தும் வகையில் Lompat Ketinting விளையாட்டு முறை, Magic Pot, தொழில்நுட்பம் பற்றிய ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை விளக்குதல், EGG கணிதப் பாடத்தை மேற்கொள் காட்டும் கண்டுப்பிடிப்பு மற்றும் உயிர் காக்கும் விவசாய பரிணாமக் கருவி ஆகிய படைப்புகளை மாணவர்கள் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

இதுபோன்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வதன் மூலம் அறவியல் பாடத்திலும் அவர்களால் சிறந்து விளங்க முடிவதாக, நளினா மேலும் விவரித்தார்.

இதனிடையே, அண்மையில் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நேர்த்தி நிறைவு விழாவின் போது அனைத்துலக புத்தாக்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)