கம்போடியா, டிசம்பர் 16 (பெர்னாமா) -- தாக்குதல்களைத் தூண்டிவிட்டதாகத் தாய்லாந்தும் கம்போடியாவும் ஒன்றோடு ஒன்று குற்றஞ்சாட்டி வரும் வேளையில் அவ்விரு நாடுகளின் எல்லையில் மோதல்கள் இன்னும் தொடர்கின்றன.
கம்போடியா ஒரே நாளில் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லையில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கம்போடியாவின் இத்தாக்குதலுக்குத் தாய்லாந்து எதிர் தாக்குதல்களுடன் பதிலளித்தது.
முன்னதாகக் கம்போடியா மேற்கொண்ட தாக்குதல்களில் தாய்லாந்து வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டதாக அவ்வமைச்சு குறிப்பிட்டிருந்தது.
தாய்லாந்து இராணுவம் பல்வேறு கம்போடியத் தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதோடு F16 போர் விமானங்களையும் ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடர்ந்ததாகக் கம்போடிய தேசிய தற்காப்பு அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கம்போடிய இராணுவம் விழிப்புடன் உள்ளதோடு நிலைமையை அனுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)