தாய்லாந்து, டிசம்பர் 15 (பெர்னாமா) -- இன்று காலை நடைபெற்ற குதிரையேற்றம் போட்டியில் தேசிய வீராங்கனை மேகன் மின் எர்ன் டிங் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
76.525 என்று மொத்தப் புள்ளியில் மலேசியா முதலிடம் பிடித்த வேளையில் இரண்டாம் மூன்றாம் இடங்களில் தாய்லாந்து வெள்ளி வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
மற்றொரு நிலவரத்தில், மலேசிய திடல்தட போட்டிகளில் தேசியக் குழு தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்று வருகிறது.
பேங்காக் தேசிய அரங்கில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டியில் ஆண்ட்ரே அனுரா அனுவார் 7.71 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
அதோடு, ஆடவருக்கான 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் மலேசிய அணி 39.03 வினாடிகளில் புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)