பொது

மாதந்திர ரஹ்மா அடிப்படை உதவித் தொகை; 56 லட்சம் பேர் பயன் - அமீர் ஹம்சா

18/12/2025 03:27 PM

கோலாலம்பூர், நவம்பர் 18 (பெர்னாமா) -- இவ்வாண்டுக்கான மாதந்திர ரஹ்மா அடிப்படை உதவித் தொகைக்கான மொத்த தகுதித் தொகை 500 கோடி ரிங்கிட்டை எட்டியிருக்கும் நிலையில், இதுவரை மொத்தம் 56 லட்சம் பேர் அதனைப் பெற்றிருப்பதாக பதிவாகியுள்ளது.

புதிதாக செய்யப்பட்ட மேல்முறையீடுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுக்குப் பின்னர், பதிவு செய்யப்பட்ட விற்பனை தளங்களில் MyKad-ஐ பயன்படுத்தி அடிப்படை பொருட்களை வாங்கியவர்கள் உட்பட, மொத்தம் 99 விழுக்காட்டினர் பயனடைந்திருப்பதோடு, அத்திட்டத்திற்காக 4,590 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

“2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பெரியவர்களுக்கு ஒரே முறையாக வழங்கப்படும் சாரா திட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான அல்லது மொத்த பெறுநர்களின் எண்ணிக்கையில் 92 விழுக்காடு 1,910 கோடி ரிங்கிட் செலவிட்டுள்ளனர்,“ என்றார் அவர்.

இன்று, மேலவையில் கேள்வி பதில் நேரத்தின் போது அமீர் ஹம்சா அசிசான் அதனைத் தெரிவித்தார்.

பரிவர்த்தனைகளின் அதிகரிப்பைக் கையாள SARA கட்டண முறையின் திறன் குறிப்பிட்ட சில முன்னேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)