அமெரிக்கா, டிசம்பர் 18 (பெர்னாமா) -- 14 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தலா 1,776 அமெரிக்க டாலர் சிறப்பு போனஸ் எனப்படும் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
வரி வசூலிப்பால் பெறப்பட்டப்பட்ட நிதியின் மூலம் இத்தொகை வழங்கப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று டோனல்ட் டிரம்ப் கூறினார்.
''1,450,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கிறிஸ்துமசுக்கு முன்பு 'வீரர் உதவித்தொகை' என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு உதவித் தொகையைப் பெறுவார்கள் என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 1776-ஆம் ஆண்டில் நமது நாடு நிறுவப்பட்டதைக் கௌரவிக்கும் வகையில் 'வீரர் உதவித்தொகை' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் $1,776 அனுப்புகிறோம். அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். காசோலைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.'' என்றார் டோனல்ட் டிரம்ப்
அமெரிக்கா நிறுவப்பட்ட ஆண்டைக் கௌரவிக்கும் வகையில் 1,776 அமெரிக்க டாலர் சிறப்பு உதவித் தொகையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)