பொது

MYRMK:13-வது மலேசியா திட்டத்தை, பொருளாதார அமைச்சு அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும்

18/12/2025 04:34 PM

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பெர்னாமா) -- 13-வது மலேசியா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு செயல்முறை MyRMK-ஐ பொருளாதார அமைச்சு அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும்.

MyRMK ஒரு நிலையான திட்டமாக மட்டுமின்றி தொடர் கண்காணிப்பு செயல்முறையாவும் செயல்படும் என்று அதன் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.

''MyRMK, இது ஒரு திட்டம் மட்டுமல்ல. அது ஆற்றல் நிறைந்தது. அதாவது நான் முன்னதாக குறிப்பிட்டதை போல, திட்டத்தின் முன்னேற்றம் மட்டுமல்ல, செயல்படுத்த விரும்பு இலக்குகளை அடைந்துள்ளதா என்பது குறித்த மேம்பாடுகளும் உள்ளன. அதனால்தான், இந்த அணுகுமுறையின் மூலம் இது செயல்பாட்டுடனும் நேர்த்தியாகவும் இருக்கும். மேலும் எங்களது செயல்திறனை அதிகரிக்கும்.'' என்றார் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் 

இன்று, மேலவையில் 13-வது RMK-இன் செயல்திறன் அளவை கண்காணிப்பது குறித்து தெரிந்துக் கொள்ள செனட்டர் டான் ஸ்ரீ லோ கியான் சுவான் எழுப்பிய கேள்விக்கு அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் அவ்வாறு பதிலளித்தார்.

செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு செயல்திறனை மேம்படுத்துவதே இந்த அணுகுமுறையின் நோக்கமாகும் என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)