உலகம்

லண்டனில் மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் பொறுப்பற்றது

18/12/2025 04:40 PM

லண்டன், டிசம்பர் 18 (பெர்னாமா) -- இங்கிலாந்து, லண்டனில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்டு வரும் ஐந்து நாள் வேலைநிறுத்தம், ஆபத்தானது மற்றும் மிகவும் பொறுப்பற்றது என்று பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்தார்மெர் சாடியிருக்கிறார்.

வேலைநிறுத்தத்தை காரணமாகக் கூறி, மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை கைவிடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்,

நேற்று காலை மணி 7 தொடங்கி, இந்த ஐந்து நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கவும், பணவீக்க விகிதத்திற்குக் குறைவாக வழங்கப்படும் ஆண்டு ஊதியத்தை உயர்த்தவும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் BMA கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், புதிய பயிற்சி இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் விரும்பம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் பிற நோய்களின் அதிகரிப்பை மருத்துவமனைகள் எதிர்கொள்வதால், வேலைநிறுத்தத்தின் போது திட்டமிடப்பட்ட சில சேவை பாதிக்கப்படும் என்று தேசிய சுகாதார சேவை என்.எச்.எஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சுகாதார சேவை தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய என்.எச்.எஸ் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதாக பி.எம்.ஏ தெரிவித்துள்ளது.

தற்போது, லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் செயின்ட் தோமஸ் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 50 மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)