பொது

நயிம் குர்னியாவன் வேட்பாளராக களமிறங்குவதை தேசிய முன்னணி பரிசீலிக்க தயார்

18/12/2025 05:17 PM

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பெர்னாமா) --  கினபதாங்கான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மறைந்த டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின்-இன் மகன் முஹமட் நைம் குர்னியாவன்-ஐ வேட்பாளராக களமிறக்குவதைப் பரிசீலிக்க தேசிய முன்னணி தயாராக உள்ளது.

முன்னதாக அத்தொகுதியில் போட்டியிட குர்னியாவன்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று புங் மொக்தார் பரிந்துரைத்திருந்ததாக தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொகுதி காலியானால் முஹமட் நைம் குர்னியாவன்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றுபுங் மொக்தார்-இடம் இருந்து தமக்கு தனிப்பட்ட முறையில் செய்தி வந்ததாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''மறைந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தாருடன் நான் கலந்துரையாடிய போது, நயிம் புங் மொக்தாரை கினாபாத்தாங்கன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் இதனை ஏற்றுக் கொள்ளுவதும் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆனால், தலைமைத்துவத்துடனும் சபா மாநில அரசாங்கத்துடனும் நான் கலந்தாலோசிக்க வேண்டும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி

இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்காத Gabungan Rakyat Sabah கூட்டணிக்கு சாஹிட் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)