கோலாலம்பூர், டிசம்பர் 18 (பெர்னாமா) -- Influenza ஏ சளிக் காய்ச்சலின் காரணமாக இன்று நீதிமன்றம் வர இயலாத பிரபல பாடகர் நேம்வி என்று அறியப்படும், வீ மேங் சீ சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வழக்கு விசாரணையை கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உடல்நலக் குறைவால் நேம்வி நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்று, மஜிஸ்திரேட் அதிகா முஹமட் @ முஹமட் சயிம் மற்றும் மஜிஸ்திரேட் எஸ்.அருந்ஜோதி ஆகிய இருவரிடமும், நேம்வியின் வழக்கறிஞர் ஜோஷுவா தே தெரிவித்தார்.
''அவரால் இன்று நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. அவருக்கு உடல் நலமில்லை. எனவே, அவரின் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவ விடுப்பை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அதுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை,'' என ஜோஷுவா தே கூறினார்.
எனவே, வரும் டிசம்பர் 22 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 19 ஆகிய தேதிகளில் இரு வழக்கு விசாரணைகள் நடைபெறும் என்று நீதிமன்றம் நிர்ணயித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)