உலகம்

ஆஸ்கார் விருது விழா யூடியூப்பில் ஒளிபரப்பப்படும்

18/12/2025 05:41 PM

லாஸ் ஏஞ்சலஸ், டிசம்பர் 18 (பெர்னாமா) -- ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆஸ்கார் அகாடமி விருது விழாவின் ஒளிபரப்பு 2029-ஆம் ஆண்டு தொடங்கி உலகம் முழுவதும் YOUTUBE-பில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது பார்வையாளர்கள் இணையத் தளங்களை நாடுவதால் HOLLYWOOD விருது நிகழ்ச்சிகள் உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஆதரவும் மதிப்பீடும் குறைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒப்பந்த காலத்தில் திரைப் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு விருதளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் யூடியூப்பில் ஒளிபரப்பப்படும்.

இதற்காக யூடியூப்பில் பிரத்யேக இலக்கவியல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

1976-ஆம் ஆண்டு முதல் வால்ட் டிஸ்னி-க்குச் சொந்தமான ABC தொலைகாட்சி ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது விழாவை ஒளிபரப்பி வருகிறது.

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒளிபரப்பப்பட்ட ஆஸ்கார் விருது விழாவை ஒரு கோடியே 97 லட்சம் அமெரிக்க பார்வையாளர்கள் கண்டு கழித்தனர்.

ஆனால் 1998-ஆம் ஆண்டில் ஒளிபரப்பட்ட அந்த விருது விழாவை ஐந்து கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையிட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)