ஜாலான் பந்தாய் டாலாம், டிசம்பர் 18 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள 10 நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களை உட்படுத்தி அடுத்தாண்டு எந்தவொரு டோல் கட்டணமும் உயர்த்தப்படாது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''2026-ஆம் ஆண்டிற்கு, 10 நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள குறித்து பொதுப்பணி அமைச்சால் விவரிக்கப்படும் என்று நேற்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த 10 நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களை உட்படுத்தி டோல் கட்டணம் அதிகரிக்கப்படாது. அரசாங்கத்திற்கு நிதி தாக்கங்கள் உள்ளன. எனவே, அந்த தொகையை அரசாங்கமே ஏற்கும்,'' என டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இது தொடர்பிலான தொடர் தகவல்களை பொதுப்பணி அமைச்சு விவரிக்கும் என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)