பேங்காக், டிசம்பர் 19 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில் ஸ்குவாஷ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவில் தேசிய ஸ்குவாஷ் வீரர் சஞ்ஜய் ஜீவா மூலம் மலேசியா மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றது.
பேங்காக், டுசிட், வாஜிராவுத் கல்லூரியில் நான்கு செட்கள் வரை நீடித்த இறுதி போட்டியில், சஞ்ஜய், சக நாட்டவரான டுன்சான் லீ-யை தோற்கடித்தார்.
முதலாம் செட் ஆட்டத்தில், டுன்சான்-னின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சஞ்ஜய் 6-11 என்று தோல்வி கண்டார்.
எனினும், அடுத்த மூன்று செட் ஆட்டங்களில் தொடர்ந்து அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சஞ்ஜய். 11-6, 11-5, 11-4 என்று தங்கப் பதக்கத்தை தமக்குச் சொந்தமாக்கினார்.
''நான் உள்ளே போகும்போது, சரி, நீ என்ன செய்தாலும் பரவாயில்லை, நீ தோற்றால் நீ மிகவும் கடினமாக விளையாடுவாய். அவர் உன்னை தோற்கடிக்க வேண்டும். எனவே, நான் போட்டியை நீட்டிக்க முயற்சித்தேன். மேலும், நான் நீண்டநேர போட்டிகளில் அதிக வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன். கடைசி ஆட்டத்தில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைத்தது என்று நினைக்கிறேன்,'' என சஞ்ஜய் ஜீவா கூறினார்.
சீ விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றிருக்கும் சஞ்ஜய்க்கு இது முதல் வெற்றியாகும்.
இதனிடையே, சீ விளையாட்டு போட்டியில் முதல் முறையாக களம் கண்ட தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை நொர் அய்னா அமானி அம்பாண்டி-யும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சக நாட்டவரான யீ சின் யிங்-கை 3-1 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
இதன்வழி நாட்டின் ஸ்குவாஷ் அணி, இப்போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)