உலகம்

தைபேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதால் நால்வர் பலி

20/12/2025 02:34 PM

தைபேய், டிசம்பர் 20 (பெர்னாமா) -- தைவான் தலைநகர் தைபேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் நால்வர் பலியாகினர்.

கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்த இளைஞர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததால் அவரும் உயிரிழந்தார்.
    
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் அந்த ஆடவர் உயிரிழந்ததைப் போலீஸ் உறுதிப்படுத்தியது.

அச்சந்தேக நபர் உள்நாட்டைச் சேர்ந்த 27 வயது சாங் வென் (Chang Wen) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தைபேயில் உள்ள ரயில் நிலையத்தின் முன்பு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அந்த இளைஞர் தாக்குதலில் ஈடுபட்டார்.

கத்தியால் கொண்டு தாக்கியதால் பலர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)